கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யஹலதன்ன பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி – நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேருந்தே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.