நாடளாவிய ரீதியில் இன்றும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.