கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹீவனில் உள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் இறுதிக் கிரியைகள் 17.03.2024 இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பௌத்த விவகார காங்கிரஸ் இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளதுடன், அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் இறுதிக் கிரியைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்கவும் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளார்.