நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை கொள்வனவு செய்யவதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 50 கோடி ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால், 15.03.2024 முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு நெல் களஞ்சியசாலைகள், நெல்லை கொள்முதல் செய்வதற்காக திறக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.