இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் துறைமுகங்கள், கடல்சார் விவகாரங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நியமனம் 13.03.2024 வழங்கப்பட்டுள்ளது.
எயார் வைஸ் மார்ஷல் கொட்டகதெனிய, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச கற்கைகள் மற்றும் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.
மேலும் அவர் அமெரிக்கா மற்றும் சீனாவின் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மேலதிக கல்வியையும் பயின்றுள்ளார்.
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் முன்னர் கடமையாற்றிய பி.ஏ.ஜெயகாந்த சமீபத்தில் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.