இலங்கையின் சவூதி அரேபியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட அமீர் அஜ்வாத்தை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வொன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியரியரும் அரப் நியூஸ் கொழும்பு நிருபருமான மொஹமட் ரசூல்தீன் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மொஹமட் ரசூல்தீன், சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அமீர் அஜ்வாத் ஆகியோர்கள் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் வெளிநாட்டுத் தூதுவர்கள், விசேட அழைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் மொஹமட் ரசூல்தீன் ஆகியோர் இணைந்து சவூதி அரேபியாவிற்கான தூதுவர் அமீர் அஜ்வாத்திற்கு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.