சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.டி சுதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் 13.03.2024 இரவு வருகைத் தந்த போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு 14.03.2024 மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.