நாட்டில் உள்ள பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை திட்டமிடுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் பின்பற்றவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடந்த மாதம் 26 ஆம் திகதி கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
அதிக வெப்பம் நிலவும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகுவதற்கான அல்லது சோர்வைப் போக்குவதற்கான வழிவகைகளை செய்வது பொருத்தமானது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வெப்பம் நிலவும் நாட்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை அவ்வாறே பின்பற்றுமாறு கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.