மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.