சில்மியா யூசுப்.
கொழும்பு
இலங்கையின் பிரபல இணைய தளமான Colombo Times, சவூதி அரேபியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள OL அமீர் அஜ்வத்தை பாராட்டி கௌரவிக்கும் வகையில் மார்ச் 11 திங்கட்கிழமை கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சியொன்றி ஏற்பாடு செய்யப்பட்டது.
கொழும்பு டைம்ஸின் பிரதம ஆசிரியர் மொஹமட் ரசூல்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேசியா, நேபாளம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் மாலைதீவுகள் மற்றும் மலேசியாவின் தூதரகத்தின் பிரதித் தலைவர்களும்,
வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் யூ எல் ஜௌஹர், ட்ரவல் குளோபலின் தலைவர் ரிஸ்மி ரியால் மற்றும் மேக் குழுமத்தின் துணைத் தலைவர் நில்ருக்ஷி டி, ஊடகவியலாளர் அமீன், என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.