நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்றைய தினத்திற்கான (11) அறிவிப்பையே வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி மேல், வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பமான வானிலை இன்றைய தினம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.