கொமர்ஷல் வங்கியின் மிகவும் பிரபலமான வாகனங்களுக்கான வரையறுக்கப்பட்ட கால குத்தகை ஊக்குவிப்பு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் அறிமுகமாகி உள்ளது. சந்தையில் இன்று கிடைக்கக் கூடிய ஆகக் குறைந்த வட்டி வீதம் மற்றும் ஏனைய வசதிகளுடன் இது அறிமுகமாகி உள்ளது.
இலங்கையின் தனிச்சிறப்பு மிக்க தனியார் வங்கி தனது ‘குத்தகை திருவிழா’ 2023 செப்டம்பர் 27வரை அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஐந்தாண்டு காலத்துக்கான மாதாந்த குத்தகை கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாவுக்கு 2,094 ரூபாவில் தொடங்குகின்றது. தனிப்பட்ட தேவைகளுக்காக புதிய அல்லது முன்னர் பாவிக்கப்பட்ட வாகனங்களின் கொள்வனவு, வர்த்தக மற்றும் விவசாய வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றின் கொள்வனவுக்காக இந்த குத்தகை முறையப் பயன்படுத்தலாம்.
மேலும் காப்புறுதி சந்தாக்களுக்கான இலகு தவணை கொடுப்பனவு முறை, உதிரிப்பாக கொள்வனவின் போது விஷேட கழிவு, குத்தகையில் பெறப்பட்ட வாகனத்துக்கான விஷேட பராமரிப்பு சேவைகள், குத்தகையை பெற நெருக்கடிகள் மற்றும் பரபரப்பற்ற அனுமதி சேவைகள் என்பனவும் வழங்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது.
மேலதிகமாக வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட வருமான வசதிக்கு எற்றவிதத்தில் வடிவமைக்கப்பட்ட குத்தகைத் தெரிவுகள், வங்கியின் சுப்பர் குத்தகை மற்றும் ஓரளவு குத்தகை முறையிலான குத்தகை வசதிகள் என்பனவற்றையும் தெரிவு செய்து கொள்ள முடியும்.
வங்கியின் சுப்பர் குத்தகை முறை மூலம் வாடிக்கையாளர்கள் விலை கூடிய வாகனங்களையும் குறைந்த குத்தகை கட்டணத்தில், குறைந்த முன் கட்டண கொடுப்பனவில் கொள்வனவு செய்ய முடியும். ஓரளவு குத்தகை முறை மூலம் முதலாவது ஆண்டில் விலை கூடிய வாகனத்தை குறைந்த வாடகையில் பெற்றுக் கொள்ள முடியும். முதல் ஆண்டில் உரிய வாடகையில் அரைவாசியை செலுத்தும் வசதியும் வாடிக்கையாளருக்கு உண்டு. எஞ்சிய காலத்தில் வழமையான வாடகைகளை செலுத்தலாம். மிஞ்சிய தொகையை கடைசி வாடகையாக செலுத்த முடியும். இந்த முறையானது மீள் கொடுப்பனவுக்கு இலகு கட்டண முறையொன்றையும் வழங்குகின்றது. அத்தோடு மீதிக் கடடணத்தை செலுத்த குத்தகை காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடித்துக் கொள்ளவும் முடியும்.
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி, உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட வங்கி, கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 271 கிளைகள் மற்றும் 957 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது, அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய்பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.