இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முன்னால் காப்பாளர் அமரர் ஜெயம் விஜயரத்தினத்தின் 87 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் துணைவியார் கல்லூரியின் தற்போதைய காப்பாளர் யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினத்தினால் பாடசாலைக்கு பேரூந்து ஒன்று கையளிக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் நா.புவனேஸ்வரராஜா தலைமையில் வியாழக்கிழமை கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லூரியின் காப்பாளர் யோகேஸ்வரி விஜயரத்னம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பஸ் வண்டியின் சாவியை அதிபரிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் கெளரவ அதிதிகளாக நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் டி. எம். பி. எஸ். பெரேரா, நீர்கொழும்பு கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஏ.எம்.எஸ். துஷாரி, மத்திய வங்கி முன்னால் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.