மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண் மற்றும் பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள மகளிர் தின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக சர்வதேச மகளிர் தின செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போதைய சமூக நெருக்கடிகளின் மத்தியிலும் கூட, பெண்களின் போசனை, சுகாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பெண்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மகளிர் தினச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.