இலங்கையின் சர்வதேச வர்த்தக சபையால் (ICCSL) அமெரிக்காவின் சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளர் நிலையம் (AICPA) மற்றும் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் (CIMA) என்பனவற்றின் ஒத்துழைப்புடன் நாட்டின் ‘மிகவும் கவர்ச்சிமிக்க பத்து கம்பனிகளில்’ ஒன்றாக கொமர்ஷல் வங்கி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் தனிச்சிறப்பு மிக்க தனியார் வங்கி இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும். தகுதி தரம் என்பனவற்றுக்கான செயற்பாட்டு குறிகாட்டிகளின் அடிப்படையில் தீவிரமான மதிப்பீட்டின் பின் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
இந்தக் குறிப்பிடத்தக்க கௌரவம் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க ‘ஒரு கூட்டாண்மை நிறுவனத்துக்கு கவர்ச்சியைத் திரட்டும் முக்கிய காரணிகளில் ஒன்றாக நிலைத்தன்மை செயற்பாடுகள் இருக்கும் அதேவேளை சிறந்த கூட்டாண்மை பிரஜை, சுற்றாடல் மற்றும் சமூக ஆளுகை, தார்மிக இணக்கப்பாடுகள், வாடிக்கையாளர் பதில்கூறல் இயல்புகள் என்பனவும் சம அளவில் முக்கியத்துவம் பெறுவதாகவே நாம் நம்புகின்றோம். கொமர்ஷல் வங்கியின் முக்கிய அவதானப் புள்ளிகளாக இவை காணப்படுகின்றன. இதனால் தான் நாம் மிகவும் கவர்ச்சிகரமான கம்பனிகளின் பட்டியலில் மீண்டும் அங்கீகாரம் மிக்க இடத்தைப் பெற்றுள்ளோம். இது எம்மை மேலும் உற்சாகப்படுத்துகின்றது’ என்று கூறினார்.
இலங்கையின் ‘உறுதியான வங்கி வர்த்தகமுத்திரை’ ‘2023ன் மிகவும் கௌரவம் மிக்க வங்கி’ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி 2022 முடிவில் மொத்த சொத்தாக 2.5 ட்ரில்லியன்களைப் பதிவு செய்துள்ளது. மொத்த வருமானம் 280 பில்லியன் ரூபா வைப்பு அடித்தளம் 1.9 ட்ரில்லியன் கடன் புத்தகம் 1.2 ட்ரில்லியன் தேறிய இலாபம் 24 பில்லியன் என பதிவாகி உள்ளது.
2022ல் வங்கியின் செயற்பாடுகளில் கோடிட்டுக் காட்ட வேண்டிய ஒரு அம்சம் அந்த ஆண்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிப் பிரிவுக்கு ஆகக் கூடுதலான கடனை வழங்கும் தரப்பாக கொமர்ஷல் வங்கியை நிதி அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகும். நாட்டிலுள்ள அரசுக்கு சொந்தமான தனியார் மற்றும் விஷேட வங்கிகளால் வழங்கப்படும் கடன்களில் மூன்றில் ஒன்று கொமர்ஷல் வங்கியால் வழங்கப்பட்டது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 271 கிளைகள் மற்றும் 957 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியது அங்கு வங்கி 20 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது.