இரத்தினபுரி நீதிமன்ற கட்டிட வளாக வீதியில், பாதசாரி கடவைக்கு அருகில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்தொன்றில் உயிரிழந்த நபரின் தந்தையால் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது நேற்று(06) காலை அசிட் திரவம் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த மேலும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அசிட் திரவத்தை வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.