ஏ.எஸ்.எம்.ஜாவித் 2024.03.06
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கு 50 மெற்றிக் தொன் பேரீட்சம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர் சோரத்ன விதாரனபத்திர மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் ஆகியோரிடம் இன்று திணைக்களத்தில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
இதன்போது இலங்கைக்கான சவுதியின் நிவாரண குழுவின் தலைவர் இப்ராஹிம் மொஹமட் ஹர்பி, சவுதிக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமீர் அஜ்வாத், தூரதரகத்தின் அதிகாரிகள், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ் அலா அஹமட்இ என். நீலோபர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பேரீத்தம் பழங்களை திணைக்களம் பதிவு செய்யப்பட்ட 2500 பள்ளிகளுக்கும் ஒரு பள்ளிக்கு தலா 20 கிலோ வீதம் உரிய முறையில் வழங்கப்படும் என திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.