அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கான ‘பாடசாலை உணவுத் திட்டம்’ நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலங்கையில் 100 கல்வி வலயங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 902 பாடசாலைகளில் ‘பாடசாலை உணவுத் திட்டம்’ அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் தெரவித்துள்ளது.
இந்த திட்டம் பாடசாலை மாணவர்கள் 1.08 மில்லியன் பேருக்கு ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு உணவுக்காக 85 ரூபா செலவிடப்படுகிறது.
ஆனால் இது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழு , விலை ஏற்ற இறக்கத்தின் விளைவாக எழுமாறாக ரூ. 110 ஒரு உணவுக்கு குறைந்தபட்சம் செலவிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ”சேவ் த சில்ட்ரன் அமைப்பு” 2024 ஆம் ஆண்டுக்கான ‘ பாடசாலை உணவுத் திட்டத்தின்’ கீழ் 917 பாடசாலைகளில் 200 ஆயிரம் மாணவர்களுக்கு 03 உணவு வகைகளை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.
இதன்படி ஒரு மாணவரின் உணவுக்காக செலவிடப்படும் தொகையை 110 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆரம்பப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்குள் 170 நாட்களுக்கு ‘ பாடசாலை உணவுத் திட்டத்தை’ செயல்படுத்துவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்