முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் கம்பளை தேர்தல் தொகுதி அமைப்பாளருமான லாபிர் ஹாஜியார் குறிப்பிட்டார்.
விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளதாக கூறிய அவர் முஸ்லிம் தமிழ் கட்சிகளும் ஜனாதிபதியோடு கைகோர்க்க உள்ளதாக தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரனில் விக்ரமசிங்க இறைவன் நாட்டத்துடன் வெற்றிபெறுவார் என அவர் மேலும் கூறினார்.