சில்மியா யூசுப் கொழும்பு:
தெகிவளை அல் இமாம் அல் அஸ் அரபிக் கல்லுாரி ஏற்பாட்டில் ரமலான் வருகையை முன்னிட்டு கடந்த 02.03.2024 திகதி வெள்ளவத்தை மெரைன் க்ரேன்ட் மண்டபத்தில் ரமாழானை வரவேற்கும் வகையில் ஓர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் கனடாவில் உள்ள சலாஹூடீன் பள்ளிவாசலின் பிரதான இமாம் இஸ்லாமிய பேச்சாளர் அஷ்ஷைக் ஜீல் ஸாதிக், அஷ்ஷைக் ஸஃத் ஹார்மெனி பேன்ட், அல் ஹாஜ் ஹம்ஸா மஹ்ஸூமி முஸ்அத் கரீம் ஆகியோர் வருகை தந்ததோடு
இவர்களின் மார்க்க சொற்பொழிவு, கஸீதா, ஸலாவாத் கிராத் மற்றும் , துஆப் பிராத்தனையும் மிக சிறப்பான நிகழ்த்தி இருந்தனர்.
இந் நிகழ்வில் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி கல்லுாரி அதிபர்,மொளலவிகள், அறகுக்கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஏனைய அதிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Photos by ASHRAFF SAMAD