அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசிறி முத்துகுமாரன சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரட்ன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அவர் பதவியேற்றுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட முத்துகுமாரன கடந்த பொதுத் தேர்தலில் 39,895 வாக்குகளை பெற்றிருந்தார்.