தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டமும், இலங்கை ஜமா – அத்தே இஸ்லாமி கொழும்பு பிராந்தியமும் இணைந்து, புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்திருந்த ரமழான் வசந்தம் சிறப்புக் கவி ராத்திரி கவியரங்கம், அண்மையில் கொழும்பு தெமட்டகொடை வீதி, தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மறைதாஸன் தாஸீன் நத்வி அரங்கில் ரமழானை வரவேற்று நடைபெற்ற இக்கவியரங்கிற்கு, கலாபூஷணம் தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமை தாங்கினார்.
கவிஞர்கள் என். நஜ்முல் ஹுசைன், அஷ்ஷெய்க் இஸ்மத் அலி (நளீமி) , அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி), புத்தளம் மரிக்கார் ஆகியோர் கவிபாடி சபையோரை மகிழ்வித்தனர்.
தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் முஹம்மத் ஹஸன் வரவேற்புரையை வழங்க, நிகழ்வுகளை முஷ்பிக் தொகுத்து வழங்கினார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
04/03/2024.