டயனா கமகே
ஐ. ஏ. காதிர் கான் – ‘ஸ்பா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல. ஏனெனில், இது உயர் மட்ட தொழில் முறையைக் குறிக்கிறது மட்டுமல்ல ஆரோக்கிய மையத்தையும் குறிக்கிறது.
எனவே, அந்தப் பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டியது அவசியம் என, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஸ்பா’ என்ற பெயரைப் பயன்படுத்துவது, அத்தகைய நிறுவனங்களில் பணி புரியும் தனி நபர்களின் தொழில் முறையை அவமதிக்கிறது. “ஸ்பா” துறையுடன் தொடர்புடைய கண்ணியத்தையும் மரியாதையையும் நிலை நிறுத்துவதற்கு இந்தப் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முக்கியம்,” என்றார்.
“ஒரு பெண் “ஸ்பா”விலோ அல்லது ஹோட்டலிலோ “மஸாஜ்” செய்பவராகப் பணி புரிந்தால், குறித்த பெண் யாரிடமாவது “ஸ்பா”வில் வேலை செய்வதாகச் சொன்னால், மக்கள் அவளை ஒரு விபச்சாரியைப் போல பார்க்கிறார்கள். ஏனென்றால், “ஸ்பா” என்ற பெயர், அவ்வாறு பயன்படுத்தப்பட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ‘ஸ்பா’ என்ற பெயரை மாற்ற வேண்டும். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது மற்றும் இரவு நேர மதுக்கடைகள் விபச்சாரத்துடன் செல்வது குறித்து, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், விபச்சாரத்துடன் செல்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.
“விபச்சாரியுடன் செல்ல மக்கள் குடிக்க வேண்டும் என, நான் நினைக்கவில்லை, விபச்சாரத்திற்கு 24/7. விபச்சாரத்திற்கு நேரம் இல்லை. இது உலகின் மிகப் பழைமையான தொழில். அதை யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் விரும்பினால் அது நடக்கும்.
“எனவே, மக்களாகிய நீங்கள் இதை எதார்த்தமாகப் பார்க்க வேண்டும். யதார்த்தமாகப் பேச வேண்டும். ஏனென்றால், இந்த நாட்டில் இது இன்னும் நடக்கிறது,” என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
24/02/2024.