களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக வறண்ட வானிலை காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.