நிலம் மற்றும் கடலில் பல மாதங்களாக அதிக வெப்பம் நிலவிய போதிலும், உலக நாடுகள் தமது இலக்குகளை தவரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர காலநிலை பேச்சுவார்த்தையின் போது சராசரியாக உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை பல நாட்களுக்கு தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5C ஐ விட அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்ப்பாளர்களின் காலநிலை தூதர்கள் இந்த மாதம் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வெப்பநிலை ஜூன் மாத சாதனைகளை முறியடித்தது, மேலும் தீவிர வெப்ப அலைகள் அமெரிக்காவைத் தாக்கியுள்ளன.
வட அமெரிக்காவின் சில பகுதிகள் இந்த மாதம் பருவகால சராசரியை விட 10C (18F) அதிகமாக இருந்தது, மேலும் வனத் தீயினால் ஏற்பட்ட புகை கனடா மற்றும் அமெரிக்க கிழக்கு கடற்கரையை அபாயகரமாக மூடியுள்ளது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் வறட்சியையும், ஆப்பிரிக்காவில் அரிதான மற்றும் கொடிய சூறாவளியையும் கண்டுள்ளது குறிப்பிடதக்கது.
வானிலை ஆய்வு மையத்தின் மே மாத கணிப்பின் படி 2027க்கு இடையில் நீண்ட கால சராசரி வெப்பநிலையான 1.5C வரம்பை கடப்பதற்கு 66% சதவீத வாய்ப்புள்ளதாக கூறுகிறது.
புவி வெப்பமடைதலுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் முக்கிய காரணியாக: எல் நினோ, கடலில் வீசும் சஹாரா தூசியின் குறைவு மற்றும் கந்தகக் கப்பல் எரிபொருளின் குறைந்த பயன்பாடு ஆகியவையும் அடங்குவதாக லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் காலநிலை இயற்பியல் பேராசிரியர் பியர்ஸ் ஃபோர்ஸ்டர் கூறியுள்ளார்.