(அஷ்ரப் ஏ சமத்)
எம்.ஜ.எம். மொஹிதீன் வரலாற்று ஆய்வரங்கு நிலையத்தில் வருடாந்த நிகழ்வு இலங்கை முஸ்லிம்களின் வரலாறுகள் என்ற தலைப்பில் சனிக்கிழமை 02. தபலாக கேட்போர் நிலையத்தில் பொறியிலாளர் ஜஹ்பர் எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. , நோக்க உரையை பேராசிரியர் எஸ்.ஏ.ஹுஸைன்மியா நிகழ்த்தினார். பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், கலாநிதி சிறராஜ் மசூர், சிரேஸ்ட ஊடகவியலாளர் அசீப் ஹூசைன், பேராசிரியர் ராஜ் சேமதேவ, ஜெஸ்மில் அப்துல் ரஹ்மான், விரிவுரையாலர் ஜெசிமா ஹமீட், ஊடவியலாளர் பஹ்சான் நவாஸ், சமுக சிந்தனையாளர் சிறாஜ் மசூர், மற்றும் பேராசிரியா் நுஹ்மான், கலாநிதி எம். எஸ் அனீஸ் ஆகியோர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட உரைகளும் மேடையில் வாசிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர் அலி சாஹிர் மௌலானா, ஏ.எச்.எம் பௌசி முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் எம்.எம். சுஹைர் உட்பட எம்.ஜ.எம். மொஹிதீன் ஆய்வு நிலையத்தின் உறுப்பிணர்கள், மற்றும் சட்டக்கல்லுாாியின் மாணவர்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் காலம் சென்ற எம். ஜ.எம்.. மொஹிதீன் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற நிகழ்வுகள், அளுத்கம பாதிப்புக்கள், யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் காலத்தில் முஸ்லிம்களுக்கு நடைபெற்ற உயிர் உடைமைகள் அழிவுகள் பற்றிய பல்வேறு ஆவனப் பதிவுகளை நுால் வடிவிலும் புள்ளிவிபரவியல், வடிவிலும் காலம் சென்ற மொஹிடீன் நுால்களை வெளியிட்டு இருந்தார். அவைகள் இன்றும் இந்த நாட்டில் வாழும் ஆய்வாளார்கள் பல்கலைகக்கழ ஆராய்ச்சியாளர்களுக்கு பிரயோசனமாகவும் ஆவனமாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர் நில அளவையாளர்யாளாக பொறியியலாளராக அரசியல் கட்சியொன்றின் தலைவராகவும் பின்னர் மறைந்த அஷ்ரப் அவர்களுடன் இணைந்தும் சேவையாற்றினார்
.மெஹிடீனின் எழுதிய பல்வேறு கட்டுரைகள் ஆய்வுகள் புள்ளிவிபரங்கள் ஆவனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கான மத்திய நிலையமொன்றும் அக்கரைப்பற்றில் இயங்கிவருகின்றன.
அத்துடன் இலங்கையில் வாழும் முஸ்லிம்களது வரலாறுகள் இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வந்தார்கள் பண்டைய காலத்தில் அரசர் காலத்தில் முஸ்லிம்கள் உதவிய வரலாறு. நாட்டின் நன்மைக்காக உயிர் நீத்த முஸ்லிம்கள் ,வியாபாரம், முதல் காலடி வைத்த ஆதம் அலை, கரையோபிரதேச வாழ் முஸ்லிம்கள் வியபார நோக்கமாக இலங்கை வாழ்ந்த வரலறுகள் விரிவுாக ஆய்வாளர்களாகல் எடுத்துக் கூறப்பட்டன.
.