திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் பாக்குநீரினையை 01.03.2024 நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்திக்கடந்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
பாக்கு நீரிணை கடந்து உலக சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்த் அவர்களை பாராட்டி Global world Record ஊடாக சான்றிதழ் மற்றும் பதக்கமும் இலங்கைக்கான இந்திய துணை தூதூவரால் வழங்கப்பட்டது.
இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்துள்ளார்.
இவர் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவன் தன்வந்த்திற்கு அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குறித்த சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.