கொழும்பு, மார்ச் 01, 2024 – இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடானது 2024 மார்ச் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கொழும்பில் நடைபெறும்.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவ்விளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட 100இற்கும் மேற்பட்ட இளம் தலைவர்கள் ஒன்று கூடவுள்ளனர். அமெரிக்கத் தூதரகத்தினால் நடத்தப்படும் இவ்வுச்சிமாநாடானது இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் தலைமைத்துவப்பண்பு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு தளமாக செயற்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் நேபாளம் உட்பட தெற்காசியப் பிராந்தியம் முழுவதிலும் இருந்து வருகைதரும் பிரதிநிதிகளுடன் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஐந்து American Spaceகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
சமூக சேவையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்திக்காட்டும் வகையில் கல்வி வளாகங்களிலுள்ள தராதரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான செயற்திட்டத்தினையும் இவ்வருட உச்சிமாநாடு உள்ளடக்கியிருக்கும். உள்ளூர் சமூகங்களுக்குள் நேர்மறையான தாக்கத்தினையும் நிலைபேறான அபிவிருத்தியினையும் வளர்க்கும் வகையில் கொழும்பிலுள்ள ஒரு பின்தங்கிய பாடசாலையிலுள்ள ஒரு நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் மரக்கறித் தோட்டம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் இம்மாநாட்டில் பங்குபற்றும் இளம் தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவார்கள்.
அமெரிக்கத் தூதரகத்தின் இளைஞர் மன்றமானது, அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவப் பண்புகளை எடுத்துக்காட்டும் வகையில் 18 முதல் 25 வயதுடைய துடிப்பான இலங்கையர்களை உள்ளடக்கிய ஒரு மன்றமாகும். பல்வேறு பின்னணியுடைய 15 இளைஞர்களைக் கொண்ட ஒவ்வொரு இளைஞர் மன்றக் குழுவும், தலைமைத்துவத் திறன்களை கூர்மைப்படுத்துவதற்கும், செயற்திட்டங்களை முகாமை செய்யும் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், ஒன்றிணைந்த தீர்வுகள் ஊடாக சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயற்படுகின்றன. அத்துடன், ஆண்டு முழுவதும் கற்றல், பரிமாற்றம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்முயற்சிகளுக்கான வாய்ப்புகளை வழங்கி, தலைமைத்துவப் பண்புகளை தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்யும் மையங்களாக இலங்கையிலுள்ள ஐந்து American Spaceகளும் தொழிற்படுகின்றன,
ஊடக விசாரணைகள் அல்லது மேலதிக தகவல்களுக்கு, [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியில் கோரி பிக்கல் இனைத் தொடர்பு கொள்ளவும்