இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காஸாவில் பலியாகிய பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில் இதுவரை 30,035 பேர் உயிரிழந்ததாகவும் 70,457 காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் ஆளுகையிலுள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள், முந்தைய போர்களில் சர்வதேச அமைப்புகளால் உறுதிசெய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கையில் போராளிகள், பொதுமக்கள் எத்தனை பேர் என்கிற விவரங்களை அமைச்சகம் குறிப்பிடவில்லை.