பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
வேதன பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலை நிறுத்தம் நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
தங்களது வேதனத்தை அதிகரிக்கக் கோரி, பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை மாத்திரம் அதிகரிக்கப்பதற்கு அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதன பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசகர் சம்பத் உதயங்க தெரிவித்துள்ளார்.