ஐ. ஏ. காதிர் கான் –
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 24.02.2024 சனிக்கிழமை கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், தானும் தற்போது ஒரு குழந்தைக்குத் தந்தையாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், தனியார் வைத்தியசாலைகள் வழங்குகின்ற அதே பராமரிப்பினை, அரச வைத்தியசாலைகளின் ஊடாகவும் வழங்கும் சிறப்பான வேலைத்திட்டத்தை தான் முன்னெடுக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ இதன்போது மக்களிடம் தெரிவித்தார்.