ஐ. ஏ. காதிர் கான் –
வலம்புரி கவிதா வட்டத்தின் 97 ஆவது கவியரங்கு, கொழும்பு பழைய நகர மண்டபத்தில், 23.02.2024 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
“வகவ” செயலாளர் கவிஞர் “இளநெஞ்சன்” முர்ஷிதீன் கவியரங்கிற்குத் தலைமை தாங்கினார்.
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்திய இந்நிகழ்வில், வரவேற்புரையை நிர்வாககக் குழு உறுப்பினர் மஸீதா அன்சார் வழங்க, நன்றியுரையை ஈழகணேஷ் வழங்கினார்.
இதன்போது, அண்மையில் எம்மைவிட்டும் மறைந்த “ஜீவநதி” ஆசிரியர் க. பரணீதரனின் தந்தையான கலாநிதி த. கலாமணி அவர்களுக்கான மௌனப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
“இளநெஞ்சன்” முர்ஷிதீனின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் கவிஞர்கள் எம். பிரேம்ராஜ், “பிறைக்கவி” முஸம்மில், கிண்ணியா அமீர் அலி, வாசுகி பி. வாசு, லிந்துல ஆர். நவரட்னம் , “வாழைத்தோட்டம்” எம். வஸீர், எம். ஸ்ரீதரன், இ. கலைநிலா, மினுவாங்கொடை ஏ. சிவகுமார், அருந்தவம் அருணா, ராஜா நித்திலன், “சிந்தனைப் பிரியன்” முஸம்மில், லைலா அக்ஷியா, மஸீதா அன்சார், தாமரைச் செல்வி, திருஞான சம்பந்தன், ஜீவேஸ் கௌதம், சத்திய குமாரன் அருணன், ரிஸ்மினா ரபீக், கமர்ஜான் பீபி, பாத்திமா நாதியா, ஆர். தங்கமணி, கே. லோகநாதன் ஆகியோர் கவிதை பாடினர்.
“தமிழ்த் தென்றல்” அலி அக்பர், திருமதி ஜெயா உதயா, வெளிமடை ஜஹாங்கீர், சு. ஜெகதீஸ்வரன், ஏ. எல். நஸீப், அ. உதயகுமார், ரா. ரேணுகா, எம்.எஸ்.எம். ராஸிக், முஸ்னி முர்ஷித், அமல் பாண்டி, ஏ. சஜூதா, இ. கவிதா, இ. தமிழ்ப் பிரியன், ஆர்.எஸ். ரஸ்மியா, மாத்தளைக் கமால் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.