இஸ்மதுல் றஹுமான்
“வலுவான பொருளாதாரம் வெற்றிகரமான பயணம்” எனும் தொனிப்பொருளில் புதிய கூட்டமைப்பினால் நடத்தப்படும் கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக் கூட்டம் எதிர்வரும் 24ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்தாக புதிய கூட்டமைப்பின் ஸ்தாபகர் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் புதிய கூட்டணியின் கொழும்பு மாவட்டத் தலைவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ, செயற்பாட்டுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஸ்தாபகர் நிமல் லான்சா எம்பி, பிரியங்கர ஜயரத்ன, சுகீஸ்வர பண்டார ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபலமான அரசியல்வாதிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக நிமல் லான்சா மேலும் தெரிவித்தார்.