அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தனது 52 ஆவது வயதில் இன்று (04) காலமானார். அவர் தாய்லாந்தில் ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவுஸ்திரேலிய அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய அவர், 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கட்களை கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்களை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார்.
August 27, 2023
0 Comment
264 Views