தொழிலதிபர், டான்ஸர், காமெடி நடிகர் என பன்முகத் திறமையோடு விளங்கும் ரெடின் கிங்ஸ்லி ரெடின் கிங்ஸ்லி தனது 46 ஆவது வயதில் சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஒரு டான்சராக திரையுலகில் பணியாற்றிய ரெடின் கிங்ஸ்லி, பின்னர் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான பிஸ்னஸ் ஒன்றையும் செய்து வருகிறார்.
எனினும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்த நிலையில், இவரை இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.. தான் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வைத்தார்.
சங்கீதா ‘மாஸ்டர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பல சீரியல்களில் நடித்தார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆனந்த ராகம்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ் ஜோடி காதலர் தினத்தை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.