2024ஆம் ஆண்டுக்கான தரம் 1, 5, 6 மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய, இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள், அந்தந்த பாடசாலைகளில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுமாயின், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களால், கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி நேர்முகத் தேர்வுகளை நடத்தப்படும்.
பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அதிபர்களின் ஊடாக அமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்படும்.
இதேவேளை, ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரமே பாடசாலைகளில் 6ம் தரத்துக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.