கொழும்பு
ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில் தடம் புரண்டதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி ரயிலே தடம் புரண்டுள்ளது.