லங்கா சதொச நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 இலட்சம் முட்டைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று (16) முதல் குறித்த முட்டைகளை லங்கா சதோசவில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து சதொச கிளைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.