ஐ. ஏ. காதிர் கான்
இலங்கையின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கொழும்பு மத்திய கிளை, ISRC Sri Lanka, HRC Sri Lanka, Ramya Lanka, AUMSA ஒன்றிணைந்த ஏற்பாட்டில், கொழும்பில் Blood for Humanity இரத்த தான முகாம், (15) வியாழக்கிழமை இடம்பெற்றது.
கொழும்பு – 07, ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை 50 இற்கும் மேற்பட்ட கொடையாளர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் அப்துல் ஹமீத், முன்னாள் தேசியத் தலைவர் சஹீத் எம். றிஸ்மி, பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில் ஆகியோரது வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இச்சிறப்பு இரத்த தான நிகழ்வில், வை.எம்.எம்.ஏ. பேரவையின் மத்திய கொழும்பு கிளையின் சுகாதாரப் பணிப்பாளர் எம். இஸட். சித்தீக் உள்ளிட்ட பேரவை மற்றும் பேரவையின் மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.