பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
அண்மைக்காலமாக வைத்தியசாலையில் மார்பகப் புற்றுநோயுடன் பெண்கள் அதிகமானோரை காணக்கிடைத்தது மனதிற்கு வேதனையளிக்கின்றது.
அதில் சிலர் புற்றுநோய் உடம்பில் பல இடங்களுக்கு பரவி இறுதிக்கட்டத்தில் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்து மனதளவிலும் உடலளவிலும் உடைந்து போவதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வழிகின்றது.
பெண்களில் மிகவும் பரவலாக வரக் கூடிய ஒரு புற்றுநோயாக மார்பகபுற்றுநோய் திகழ்கின்றது. எமது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றிய போதிய விளக்கம் இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
எனவே, அதை எம் பெண்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டே இப்பிரசுரத்தை எழுதுகின்றேன்.
ஆண்களும் விதிவிலக்கல்ல… மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களையும் கண்டுள்ளேன்.
●மார்பகப் புற்றுநோய் யாருக்கு ஏற்படலாம்?
யாருக்கும் வரலாம்….😳
●மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்
மார்பு சமச்சீரற்ற தன்மை
மார்பகப் புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே…
மார்பில் உள்ள ஏதாவது கட்டிகள்
முலைக்காம்பு உள்நோக்கிச் செல்லுதல்
முலைக்காம்பில் இருந்து ஏதாவது திரவங்கள் இரத்தம்/சீழ் வெளியாதல்
மார்பில் ஏதாவது பள்ளங்கள் அல்லது குழிகள் தோன்றுதல்
மார்பின் தோலில் ஆரஞ்சு பழ தோலில் உள்ளது போன்ற புள்ளிகள் தோன்றுதல்
மார்பிலோ முலைக்காம்பை சுற்றியோ ஏதாவது காயங்கள்
அக்குள் பகுதியில் ஏதாவது கட்டிகள் ஏற்படுதல்
ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்தால் சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
சுயமாக நீங்களே உங்கள் மார்பகங்களை பரிசோதனை செய்வதன் மூலம் நோய் இருந்தஇருந்தால் அடையாளம் கண்டு விடலாம்.எப்படி மார்பகங்களை சுய பரிசோதனை செய்வது என்று YouTube இல் பல வீடியோக்கள் உள்ளன. கற்றுக் கொள்ளுங்கள்
மாதம் ஒரு முறையாவது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி வைத்தியரை நாடுங்கள். இன்னும் சிறிது காலம் பார்க்கலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்..
புற்றுநோய் மிக வேகமாக பரவக் கூடிய உயிர்க்கொல்லி நோயாகும்.
இப்பிரசுரத்தை வாசிப்பதன் மூலம் நீங்கள் விழிப்புணர்வை பெறுவது மட்டுமல்லாது உங்களுக்கு தெரிந்த இன்னும் ஒருவருக்காவது விழிப்புணர்வூட்டூங்கள்.
Rifaideen Fathima Muzna
மருத்துவ பீட மாணவி
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம்.