பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
புதிய களனி பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை (12) அதிகாலை 5 மணி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருத்தப் பணிகள் காரணமாக பாலம் நேற்றிரவு 9 மணி முதல் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், கொழும்பில் இருந்து கட்டுநாயக்கவை நோக்கியும், கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், துறைமுகத்தை நோக்கி பயணிக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டனர்.