பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கடந்த வருடம் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 3.5 வீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்து அனுமதி கோரியுள்ளது.
எதிர்வரும் 15 ம் திகதி பொதுமக்கள் கருத்துகளை வினவிய பின்னர் இது தொடர்பில் மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளிக்குமென கூறப்பட்டது.