அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் 8ஆவது இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல் இன்று இறக்வானையில் நடைபெற்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்வான நகரில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன மத பேதமிண்றி பல்லின மக்களையும் ஒன்றிணைத்து நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு இலவச சேவையினை பெற்று கொண்டார்கள். இது போன்ற நிகழ்வின் ஊடாக 4500 க்கும் மேற்பட்ட பல்லின மக்களும் சேவையை பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காலை
இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் துணைச் செயலாளர் அஷ் ஷைக் எம்.எஸ். எம் தாஸிம் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகிய அஷ்ஷைக் எம். ரிபா ஹஸன்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவை பிரிவின் பிரதானற ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷைக் எம்.எச்.எம்.பவாஸ் மற்றும் சகோதரர் எம்.என்.எம்.நூபைல், அஷ்-ஷைக் டி. ஹைதர் அலி, இறக்குவானை பிரதேசக் கிளை தலைவர் அஷ்ஷைக் எம். பாரிஸ், இறக்குவானை உதய திலகாராமய விஹாராதிபதி புஸ்செல்லே பஞ்சாதிலக தேரர், வெரலுகஹமுல்ல விஹாரையின் விஹாராதிபதி அம்புலுவ தேரர்,y இறக்வானை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் சுவாமி யோகஸ்வர சர்மா, அருட்தந்தை திருவாளன் டீ.ஆர்.செல்வன் மற்றும் இறக்குவானை
பொலிஸ் நிலையy பொருப்பதிகாரி அனுர சோமசிறி ஆகியோர்கள் உற்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.