யாழ்ப்பாணம் மற்றுவெளி மைதானத்தில் 09.02.2024 பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் பிரம்மண்டமான இசை நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டை நடன இயக்குனர் கலா மாஸ்டர் செய்திருந்தார்.
மேலும் குறித்த நிகழ்வுக்கு நடிகை தமன்னா, ரம்பா, நடிகர் யோகிப் பாபு என பல தென்னிந்திய நட்சத்திரங்கள், மற்றும் தென்னிந்திய பாடகர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாறான நிலையில் இந்திய நகைச்சுவை நடிகர் யோகிப்பாபு மற்றும் கலா மாஸ்டர் நயினாதீவுக்கு வருகை நயினாதீவு நாகபூசணி அம்மனை வழிப்பட்டு சென்றுள்ளனர்.