பேருவளை- மாளிகாச்சேனை, “பைதுல் முபாறக் வ தாருல் முஸ்தபா” புகாரித் தகிய்யாவில், வருடாந்தம் நடாத்தி வரப்படும் 145 ஆம் வருட புகாரி பெரிய கந்தூரி, (11) ஞாயிற்றுக்கிழமை காலையில் தமாம் செய்யப்பட்டு, முற்பகல் முதல் பிற்பகல் வரை பகற் போசணம் வழங்கப்படும்.
மேற்படி புகாரி கந்தூரி, 2024 ஜனவரி 08 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலையில் வழமைபோல் புகாரி தகிய்யாவில் ஆரம்பம் செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை தவிர்ந்த 30 நாட்கள் தினமும் ஓதிவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி பெரிய கந்தூரிக்காக பேருவளைக்கு பிரயாணம் செய்கின்றவர்களுக்கு, கொழும்பு – மருதானை முதல் பேருவளை வரைக்கும், காலி முதல் பேருவளை வரைக்கும், இலங்கை ரெயில்வேப் பகுதியினரால் விசேட புகையிரத சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புகாரி தகிய்யா பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
11/02/2024.