தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, பக்கத்து வீட்டார் அனுமதியுடன், அவ்வீட்டிலிருந்து மின்சாரம் எடுப்பதற்கு முற்பட்ட தந்தையொருவர், மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார்.
இந்தச் சோக சம்பவம், கம்பளையில் 10.02.2024 சனிக்கிழமை மாலை பதிவாகியுள்ளது.
கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் அது. மின் கட்டணம் செலுத்த முடியாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் சுமை அதிகரிப்பால், கடந்த வாரமே மனைவி வெளிநாடு சென்றுள்ளார்.
இதன்காரணமாக, இரு பிள்ளைகளும் தந்தையின் அரவணைப்பிலேயே இருந்துள்ளனர்.
மகன் மற்றும் மகள் ஆகியோர் 5 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
11/02/2024.