இஸ்மதுல் றஹுமான்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீர்கொழும்பு, கல்கந்த சந்தியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் நீர்கொழும்பு, குரண பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ரெக்சி சல்காது என்பவரே கொல்லப்பட்ட வருபவர்.
நீர்கொழும்பு, பாலந்திசந்தியில் விடுதி ஒன்றில் வேலைசெய்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் செல்கையில் கல்கந்த சக்தியில் மிணுவன்கொடை விதிக்கு திரும்புகையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதே இடத்தில் மரணமடைந்தார் இவரின் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.