(அஷ்ரப் ஏ சமத்)
முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் மிஃராஜ் இரவு தினம் கொழும்பு 6 கெஹ வலக் டவுன் உள்ள முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் புதன்கிழமை இரவு 7 ஆம் திகதி இஷாத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இந் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக பணிப்பாளர் இசட் ஏ.எம். பைசால், தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பௌத்த சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ) மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதான இமாம் அஷ் ஷேக் வரிதீன் (நுாரி) துஆப் பிரார்த்தனை அஷ்ஷேக் எம். நுஸ்ரத் ஹக்கானி நிகழ்த்தினார்கள். இப் பிரதேச வாழ் முஸ்லிம்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.