ஐ. ஏ. காதிர் கான்
இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித மிஃராஜ் தினத்தை, இன்று (07) புதன்கிழமை அனுஷ்டிக்கின்ற நிலையில், சமய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள் மற்றும் தக்கியாக்களில் விசேட நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்துள்ளனர்.
அந்த வரிசையில், கொழும்பு கிளிப்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள கட்டக்கல மரத்தடி தைக்காவில் வருடாந்தம் இடம்பெற்று வரும் புனித மிஃராஜ் தின மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள், இன்று 07 ஆம் திகதி புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத்தொடர்ந்து, தைக்காவின் பிரதம இமாம் மௌலவி எம்.எஸ்.எம். இஸ்மாயில் (ஹியாஸி) தலைமையில் நடைபெறும்.
அல் ஹாஃபிழ் அல் ஆலிம் ஏ.எச்.எம். ஸஜ்ஜாத் ஹுஸைன் (கௌஸி) அவர்கள், “இறைத்தூதரின் புனித மிஃறாஜ் யாத்திரை” என்ற தலைப்பில் விசேட சொற்பொழிவாற்றுவார்.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து சுப்ஹான மௌலித், இஷா தொழுகையைத் தொடர்ந்து விசேட பயான், யா நபீ பைத் மற்றும் விசேட துஆ என்பன இடம் பெறவுள்ளதாகவும், தைக்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.