பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வெடிப்புச் சம்பவங்களில் காயமடைந்த 42க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தின் பிஷின் மாவட்டத்தில் உள்ள சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற முதலாவது குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் அதிகமானார் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் கில்லா சயிஃப் உல்லாஹ் (Qillah Saif Ullah) மாவட்டத்தில் இடம்பெற்ற இரண்டாவது குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது